கோப்பு படம்.
மாணவர்களுக்கு விரைவாக சான்றிதழ் வழங்க வேண்டும்
- ஓம்சக்திசேகர் வலியுறுத்தல்
- சில தாலுகா அலுவலங்களில் எந்தவித அடிப்படை வசதிகள் இல்லை.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் எம்.எல்.ஏ ஓம்சக்தி சேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை மாநி லத்தில் 10, 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு மாணவர்கள் மேற்படிப் பக்கான பூர்வாங்க பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேற்ப டிப்பில் முக்கி யமானதாக இருப்பிடம், சாதி, வருமானம் ஆகிய சான்றிதழ்கள் இடம் பெறுகின்றன.
இதை பெற நாள்தோறும் அனைத்து தாலுகா அலுவலகங்களுக்கும், பொதுமக்களும், மாணவர்களும் கடும் வெயிலை பொருட்படுத்தாமல் சென்று வருகின்றனர். சான்றிதழ்களை பெற நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.
ஒரு சில தாலுகா அலுவலங்களில் எந்தவித அடிப்படை வசதிகள் இல்லை.
இதனால் பொது மக்களும், மாணவர்களும் பல்வேறு துன்பங்களை அனுபவிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. வெயிலின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ள தால் தாலுகா அலுவலகங்களில் குடிநீர், மின்வி சிறிகளை சீரமைப்பது, பசுமை பந்தல்களை அமைக்க கவர்னர், முதல்-அமைச்சர் உத்தரவிட வேண்டும்.
சான்றிதழ்கள் பெற மாணவர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். அனைத்து தாசில்தார்களுக்கும் கவர்னர், முதல்-அமைச்சர் உடனடி உத்தரவினை பிறப்பித்து சான்றிதழ்கள் விரைவாக வழங்கவும், மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தரவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.