ரூ.21 லட்சம் செலவில் சிமெண்ட் சாலை பணியை கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.
ரூ.21 லட்சம் செலவில் சிமெண்ட் சாலை பணி
- கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- புதுச்சேரி நகராட்சி மூலம் உட்புற சிமெண்ட் சாலைகள் அமைக்கப்படுகிறது.
புதுச்சேரி:
உப்பளம் ெதாகுதி வாணரப்பேட்டை ஈஸ்வரன் கோவில் தோப்பு பகுதியில் எம்.எல்.ஏ. மேம்பாட்டு நிதியின் கீழ் 21 லட்சம் மதிப்பீட்டில் புதுச்சேரி நகராட்சி மூலம் உட்புற சிமெண்ட் சாலைகள் அமைக்கப்படுகிறது.
இப்பணியினை தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி பூமி பூஜைசெய்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் சிவ பாலன் , உதவி பொறியாளர் யுவராஜ், பரமானந்தன், பொதுப்பணித்துறை கணேசன் , தி.மு.க. தொகுதி அவைத்தலைவர் அரிகிருஷ்ணன், தொகுதி செயலாளர் சக்திவேல், துணைத் செயலாளர் ஆரோக்கியராஜ், மாநில பிரதிநிதி கணேசன், மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி, கிளை செயலாளர்கள் சந்துரு, காளப்பன் , மணி, பிரபாகரன், ராகேஷ், மகளிர் அணி குணசுந்தரி, மற்றும் ரகுராமன்,பஸ்கல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.