புதுச்சேரி

அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட காட்சி.

சிமெண்டு சாலை-வாய்க்கால் அமைக்கும் பணி

Published On 2023-07-19 12:08 IST   |   Update On 2023-07-19 12:08:00 IST
  • கென்னடி எம்.எல்.ஏ. ஆய்வு
  • அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து கடந்த மார்ச் மாதம் தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி:

புதுவை உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட வாணரப்பேட்டை பகுதியில் உள்ள நாகமுத்து மாரியம்மன் கோவில் வீதியில் புதுவை நகராட்சி மூலம் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.13 லட்சத்து 40ஆயிரம் செலவில் வாய்க்கால் மற்றும் சிமெண்டு சாலை மேம்படுத்தல் பணியை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து கடந்த மார்ச் மாதம் தொடங்கி வைத்தார்.

தற்போது அங்கு வாய்க்கால் கட்டி கான்கிரீட் சிமெண்ட் போட்டு சாலை அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டு வருகிறது.

அப்பணியை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். உதவி பொறியாளர் யுவராஜ், இளநிலை பொறி யாளர் சண்முகம், பரமானந்தம், தொகுதி செயலாளர் சக்திவேல் அவைத்தலைவர் ஹரிகிரு ஷ்ணன், தொகுதி துணை செயலாளர் ஆரோக்கியராஜ், மற்றம் கிளை செயலாளர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News