கோப்பு படம்.
பத்திர பதிவுத்துறையில் பட்டாக்கள் மாயம் குறித்து சி.பி.ஐ. விசாரணை
- இந்திய கம்யூனிஸ்டு வலியுறுத்தல்
- பத்திரப்பதிவுத் துறையில் இருக்கும் அனைத்து உயர் அதிகாரிகளையும் மாற்றம் செய்ய வேண்டும்
புதுச்சேரி:
இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் சலீம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களின் சொத்துக்கள் அபகரிக்கப்படுகிறது. இதை தடுக்க நில அபகரிப்பு தடுப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காமாட்சியம்மன் கோவில் நிலம் அபகரிப்பு செய்யப்பட்டுள்ளது. இதகுறுடத்த சார்பதிவாளர் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பதிவாளர், நில அளவைத்துறை இயக்குனர், பதிவு அதிகாரியை போலீசார் தேடுகின்றனர். இவர்கள் ஜாமீன்கோரி ஐகோர்ட்டில் மனு செய்துள்ளனர். புதுவை அரசு இதற்கு ஆட்சேபனை தெரிவிக்க வேண்டும். இந்த நிலையில் 2021 முதல் 2023 வரை சுமார் 20 ஆயிரம் பட்டா விபரங்கள் கம்ப்யூட்டரிலிருந்து மாயமாகியிருக்கிறது.
ஊழலின் உறைவிடமாக பத்திரப் பதிவுத்துறை உள்ளது. எனவே பத்திரப்பதிவுத் துறையில் இருக்கும் அனைத்து உயர் அதிகாரிகளையும் மாற்றம் செய்ய வேண்டும் என ஒரு மாதம் முன்பே இந்திய கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தியது. இந்த ஒரு மாத காலகட்டத்தில் 2 வருட பட்டா விபரங்கள் மாயமாகியிருக்கின்றன.
மெகா ஊழலாக உருவெடுத்துள்ள பத்திரப்பதிவு, நில அளவைத் துறை முறைகேடுகளை மத்திய புலனாய்வுத்துறை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.