புதுச்சேரி

கோப்பு படம்.

ரேஷன் கடைகளை திறக்க அமைச்சரவையில் ஒப்புதல்

Published On 2023-06-14 14:02 IST   |   Update On 2023-06-14 14:02:00 IST
  • அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் தகவல்
  • அரசு மக்களுக்கு ரேஷன் கடைகளை திறந்து பொருட்களை விநியோகம் செய்வோம் என்று வாக்குறுதி அளித் துள்ளது. சட்டமன்றத்திலும் உறுதி அளித்துள்ளோம்.

புதுச்சேரி:

ரேஷன் கடைகள் திறப்பு குறித்து அமைச்சர் சாய்.ஜெ. சரவணன்குமார் கூறியதாவது:-

ரேஷன் கடைகளை திறந்து மீண்டும் பொருட்களை விநியோகம் செய்வது தொடர்பாக சட்டத்துறையிடம் கருத்து கேட்கப்பட்டது. தற்போது சட்டத்துறை தனது கருத்தை தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் திட்டங்களில் நேரடி பண பரிமாற்றம் தொடரலாம். ஆனால் மாநிலஅரசு மக்களுக்கு ரேஷன் கடை களை திறந்து பொருட்களை விநியோகம் செய்வோம் என்று வாக்குறுதி அளித் துள்ளது. சட்டமன்றத்திலும் உறுதி அளித்துள்ளோம்.

மேலும் புதுவை மக்களும் ரேஷன் கடைகள் மூலம் பொருட்கள் வழங்க வேண்டும் என்று விரும்பு கின்றனர். அதோடு ஒரு குடும்பத்திற்கு வழங்கப்படும் பொருள்களுக்கான தொகை அந்த குடும்பத்தில் உள்ள ஒரு நபருக்கு வங்கி கணக்கில் சேர்க்கப்படுகிறது.

இதனை அந்த குடும்பத்தில் உள்ள அனை வருடனும் அவர் பகிர்ந்து கொள்கிறாரா என்று கேள்வி எழுகிறது.

இது போன்ற நியாயமான கருத்துக்களை கோப்பில் தெரிவித்திருக்கிறோம். இன்னும் ஓரிரு நாளில் ரேஷன் கடை திறப்பு தொடர்பான கோப்புக்கு அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்படும்.

தொடர்ந்து கோப்பு கவர்னருக்கு அனுப்பப்பட உள்ளது கவர்னரின் ஒப்புதலுக்கு பிறகு மீண்டும் ரேஷன் கடைகள் திறக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் தெரிவித்தார். 

Tags:    

Similar News