புதுச்சேரி

கோப்பு படம்

நடன மதுபாரில் ஒலிபரப்பு சாதனங்கள் பறிமுதல்

Published On 2023-04-25 14:32 IST   |   Update On 2023-04-25 14:32:00 IST
  • புதுவையில் இரவில் பாடல், நடனத்துடன் கூடிய நடன மதுபார்களுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
  • இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

புதுச்சேரி

புதுவையில் இரவில் பாடல், நடனத்துடன் கூடிய நடன மதுபார்களுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். நடன மதுபார்களில் இரவு 10 மணிக்கு மேல் சவுண்ட் சிஸ்டம் பயன் படுத்தக்கூடாது என போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

இந்த நிலையில் பெரிய கடை உதவி சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது இரவு 11.45 மணிக்கு மேல் மிஷன் வீதியில் உள்ள ஓட்டலில் 5-வது மாடியில் இயங்கிய நடன மது பாரில் அதிக சத்தம் எழுப்பப்பட்டது. போலீசார் அங்கு சென்று எச்சரித்தனர். ஆனால் நடன மதுபார் பொறுப்பாளர் போலீசாரை வெளியேறும்படி கூறினார்.

இதையடுத்து நடனமது பாரில் இருந்த மைக் ஸ்டாண்டர், கேபிள் உட்பட ஒலிபரப்பு சாதனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பொறுப்பாளர் மீது அதிக ஒலி எழுப்புதல் தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News