புதுச்சேரி

வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா நடந்த போது எடுத்த படம்.

வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா

Published On 2023-10-11 11:43 IST   |   Update On 2023-10-11 11:43:00 IST
  • இந்த ஆண்டுக்கான பிரமோற்சவ விழா கடந்த 4-ந் தேதி சுதர்சன ஹோமம் திருமஞ்சனத்துடன் தொடங்கியது.
  • இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்

புதுச்சேரி:

புதுவையை அடுத்த தொண்டமாநத்தம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பிரமோற்சவ விழா நடைபெறும். அப்போது திருப்பதியில் நடப்பது போன்று சிறப்பு பூஜையும், அர்ச்சனையும் நடக்கும். அதன்படி இந்த ஆண்டுக்கான பிரமோற்சவ விழா கடந்த 4-ந் தேதி சுதர்சன ஹோமம் திருமஞ்சனத்துடன் தொடங்கியது.

விழாவில் தினமும் சாமிக்கு திருப்பதி ஏழுமலையானுக்கு நடப்பது போன்று பூஜையும், தினம் ஒரு வாகனத்தில் வீதியுலாவும் நடக்கிறது. இந்த நிலையில் 7-ம் நாளான நேற்று இரவு வரதராஜப்பெருமாள் யானை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து வீதி உலாவும் நடைபெற்றது இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்

Tags:    

Similar News