புதுச்சேரி

கிராம நிர்வாக அலுவலகம் கட்ட செந்தில்குமார் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து  தொடங்கி வைத்த காட்சி.

கிராம நிர்வாக அலுவலகம் கட்ட பூமி பூஜை

Published On 2023-11-22 14:28 IST   |   Update On 2023-11-22 14:28:00 IST
  • செந்தில்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
  • ரூ. 20 லட்சம் செலவில் பூமி பூஜை செய்து இன்று அடிக்கல் நாட்டப்பட்டது.

புதுச்சேரி:

பாகூர் தொகுதிக்குட்பட்ட மணப்பட்டு கிராம நிர்வாக அலுவலர் கட்டிட ரூ. 20 லட்சம் செலவில் பூமி பூஜை செய்து இன்று அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு செந்தில்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பூமி பூஜை செய்து வைத்தார்.

நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட துணை கலெக்டர் மகாதேவன் பாகூர் தாசில்தார் கோபால கிருஷ்ணன் துணை தாசில்தார் விமலன் செயற் பொறியாளர் சீனு திருஞானம் உதவி பொறியாளர் பாவாடை மற்றும் மணப்பட்டு காட்டுக்குப்பம், கன்னிய கோவில், வார்கால்ஓடை, புதுநகர் பகுதியைச் சேர்ந்த ஊர் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News