புதுச்சேரி

மானியத்துடன் எந்திரம் வாங்க பயனாளிகளுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆணை வழங்கிய காட்சி. அருகில் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் உள்ளார்.

மானியத்துடன் எந்திரம் வாங்க பயனாளிகளுக்கு ஆணை

Published On 2023-07-28 14:12 IST   |   Update On 2023-07-28 14:12:00 IST
  • முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்
  • வேளாண்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார், துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

புதுச்சேரி:

புதுவை அரசு வேளாண்துறையில் விவசாயிகளுக்கு தேவை யான டிராக்டர், பவர்டில்லர், நெல்நடவு எந்திரம், களையெடுக்கும் எந்திரம், மேம்படுத்தப்பட்ட உபகரணங்கள் வாங்க மானியம் வழங்கப்படுகிறது.

மத்திய அரசு திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு ரூ.224 கோடி இதற்காக பெறப்பட்டுள்ளது. இதுவரை புதுவை பிராந்தியத்தை சேர்ந்த 28 பயனாளிகளுக்கு மானியத்தில் எந்திரங்கள், உபகரணங்கள் வாங்க ரூ.54.43 லட்சம் ஆணை வழங்கப்பட்டுள்ளது.

இப்போது அடுத்த 7 பயனாளிகளுக்கு எந்தரம் வாங்க ஆணை வழங்கும் நிகழ்ச்சி சட்டசபையில் உள்ள முதல்-அமைச்சர் அலுவலகத்தில் நடந்தது. தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆணைகளை வழங்கினார்.

நிகழ்ச்சியின் போதுவேளாண்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார், துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News