புதுச்சேரி

பிரெஞ்சு தூதுக் குழுவினருடன் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் ஆலோசனை நடத்திய காட்சி.

பிரெஞ்சு குழுவினருடன் தேனீ.ஜெயக்குமார் ஆலோசனை

Published On 2023-03-02 14:46 IST   |   Update On 2023-03-02 14:46:00 IST
  • சட்டசபை வளாகத்தில் அமைச்சர் தேனீ.ஜெயக்குமாரை பிரெஞ்சு தூதுக்குழுவினர் சந்தித்தனர்.
  • கலாச்சாரம், உணவு, சமூக அக்கறை, நீர்வள நிலவரம், தட்பவெப்ப சூழ்நிலைக்கு ஏற்ப விவசாயம் செய்முறையை பிரெஞ்சு குழுவினர் அமைச்சரிடம் விளக்கினர்.

புதுச்சேரி:

புதுவை சட்டசபை வளாகத்தில் அமைச்சர் தேனீ.ஜெயக்குமாரை பிரெஞ்சு தூதுக்குழுவினர் சந்தித்தனர்.

கலாச்சாரம் மற்றும் பிராந்தியத்திற்கான சர்வதேச ஒத்துழைப்பு மைய துணைத் தலைவர் டெல்பின் பெனாசி, உணவுக்கான பிராந்திய ஆலோசகர் எஸ்டெல் கோச்சார்ட், பிராந்திய தலைவரின் ஆலோசகர் சோலீன்பெனாய்ட், ஹெர்னாண்டஸ், ஒருங்கிணைப்பாளர் பாலின் சால்சிடோ, கூட்டாண்மை இயக்குனர் ஆலிவர் ரோலின் உட்பட 16 பேர் குழுவில் இடம் பெற்றிருந்தனர்.

கலாச்சாரம், உணவு, சமூக அக்கறை, நீர்வள நிலவரம், தட்பவெப்ப சூழ்நிலைக்கு ஏற்ப விவசாயம் செய்முறையை பிரெஞ்சு குழுவினர் அமைச்சரிடம் விளக்கினர்.

இயற்கை விவசாயத்தைப் பற்றி விரிவாக விவாதித்தனர். இயற்கை விவசாயம், ஆர்கானிக் விவசாயம் செய்யும் வழிமுறைகள் குறித்து அமைச்சர் பிரெஞ்சு குழுவிடம் கேட்டறிந்தார். பிரெஞ்சு குழுவுக்கு தேவையான உதவிகளை புதுவை அரசு செய்து தரும் என அமைச்சர் தேனீ.ெஜயக்குமார் உறுதியளித்தார்.

Tags:    

Similar News