புதுச்சேரி

கோப்பு படம்.

பாகூர் மூலநாதர் கோவில் பிரம்மோற்சவ விழா

Published On 2023-06-20 13:48 IST   |   Update On 2023-06-20 13:48:00 IST
  • பாகூரில் 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேதாம்பிகை சமேத மூலநாதர் கோவில் உள்ளது.
  • இந்த கோவிலில் ஆண்டு தோறும் பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெறும்.

புதுச்சேரி:

பாகூரில் 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேதாம்பிகை சமேத மூலநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெறும்.

இந்த நிலையில் அறங்காவலர் குழு பலர் பதவி விலகினர். இதனால் இந்த ஆண்டிற்கான பிரமோற்சவ விழா நடக்குமா என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில் இந்து அறநிலையத்துறை அலுவலகத்தில் இருந்து ஆணை பிறப்பிக்கப்பட்டது அதில் பாகூர் வேதாம்பிகை சமேத மூலநாதர் கோவில் அறங்காவலர் குழு கலைக்கப்பட்டு, தற்போது அந்த கோவில் பிரம்மோற்சவ விழாவை பாகூர் தாசில்தார் சிறப்பாக நடத்த வேண்டும் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து பாகூர் தாசில்தார் பிரித்விவ் ராஜ் கோவிலுக்கு வந்து பொறுப்பேற்று கொண்டார். இதைத்தொடர்ந்து கோவில் நிர்வாகத்தினரிடம் ஆலோசனை நடத்தினார்.

மேலும் பிரமோற்சவ விழாவுக்கான ஏற்பாடுகளை செய்வதற்கான ஒப்பந்ததாரர்கள் அழைத்து விழாக்கள் குறித்து ஆலோ சனை மேற்கொண்டார்.

இதில் வருகிற 23-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 6 மணி முதல் 7 மணிக்குள் கொடியேற்றம் நடைபெற உள்ளது.

தேரோட்டம் வருகிற ஜூலை 1-ந் தேதி காலை 6 மணி முதல் 7 மணிக்குள் நடைபெற உள்ளது.

Tags:    

Similar News