புதுச்சேரி

அகரம் பாரத் வித்யாஷ்ரம் பள்ளியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்த போது எடுத்த படம்.

அகரம் பாரத் வித்யாஸ்ரம் பள்ளியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

Published On 2023-11-18 06:13 GMT   |   Update On 2023-11-18 06:13 GMT
  • மாணவர்களுக்கு இளமைப் பருவப் பிரச்சினைகள் மற்றும் அதனை எதிர்கொள்ளும் வழிமுறைகளைப் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
  • பள்ளியின் தாளாளர் டாக்டர் சந்தானகிருஷ்ணன் மற்றும் முதல்வர் சாந்தி ஜெயசுந்தர் ஆகியோர் தலைமை தாங்கினார்.

புதுச்சேரி:

வில்லியனூர் அடுத்த அகரம் ஸ்ரீ பாரத் வித்யாஷ்ரம் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச மாணவர் தினத்தை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கு இளமைப் பருவப் பிரச்சினைகள் மற்றும் அதனை எதிர்கொள்ளும் வழிமுறைகளைப் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக குழந்தை மருத்துவரும் ஸ்ரீ லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன மூத்த பேராசிரியருமான டாக்டர்.சிவப்பிரகாசம் கலந்து கொண்டு 11 வயது முதல் 19 வயது வரை உள்ள இளமைப் பருவ பிரச்சனைகளையும் அதனை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் மற்றும் குழந்தைகள் பின்பற்ற வேண்டிய உணவு முறைகள் பற்றியும் விளக்க படத்தோடு மாணவர்களுக்கு எடுத்துக் கூறி எடுத்துக் கூறி அறிவுரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் டாக்டர் சந்தானகிருஷ்ணன் மற்றும் முதல்வர் சாந்தி ஜெயசுந்தர் ஆகியோர் தலைமை தாங்கினார். 

Tags:    

Similar News