புதுச்சேரி

இன்ஸ்பெக்டர் பாபுஜிக்கு சாதனையாளர் விருதை முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கிய காட்சி. அருகில் அமைச்சர் லட்சுமி நாராயணன், வைத்தியநாதன் எம்.எல்.ஏ. ஆகியோர் உள்ளனர்.

சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா

Published On 2023-11-19 05:29 GMT   |   Update On 2023-11-19 05:29 GMT
  • முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்
  • முன்னாள் நீதிபதி சேது முருகபதி கலந்து கொண்டு மாரியப்பனார்-சுந்தராம்பாள் உருவ படங்களை திறந்து வைத்தார்.

புதுச்சேரி:

புதுவை அய்யா மாரியாப்பனார்-சுந்தராம்பாள் அறக்கட்டளை சார்பில் 17-ம் ஆண்டு ஐம்பெரும் விழா புதுவை ராஜராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அறக்கட்டை நிறுவனர் மாரியப்பன் தலைமை தாங்கினார். புதுவை யுகபாரதி வரவேற்புரையாற்றினார். பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன், சபாநாயகம், சந்திர சேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் நீதிபதி சேது முருகபதி கலந்து கொண்டு மாரியப்பனார்-சுந்தராம்பாள் உருவ படங்களை திறந்து வைத்தார்.

இவ்விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினர்.

மேலும் சாதனையாளர்களான பரந்தூர் புலவர் ராமசாமி, சேலம் கல்லூரி பேராசிரியர் அனிதா பரமசிவம், அருட்தந்தை அந்தோனி அடிகளார், முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலைநாதன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் திருஞானம், புதுவை வரலாற்று அறிஞர் முருகேசன், பழங்குடியினர் கூட்டமைப்பு ராம்குமார், பட்டிமன்ற நடுவர் கலக்கல் காங்கேயன், உருளையன் பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி, காராத்தே சுந்தரராஜன், புலவர் உசேன், திரைப்பட இசையமைப்பாளர் ஷாஜகான் உள்பட 15 பேருக்கு சாதனையாளர் விருதுகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.

விழாவில் வைத்தியநாதன் எம்.எல்.ஏ., கலைப் பண்பாட்டுத்துறை இயக்குனர் கலியபெருமாள், புதுவை தமிழ்சங்கதலைவர் முத்து, செயலாளர் சீனு.மோகதாஸ், உசேன், பாடாகர் ஆதிராமன், திரைபட இயக்குனர் பேராசிரியர் முருகவேல் ஆகியோர் வாழ்த்தி பேசினர். முடிவில் தேன்மொழி கோபாலன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News