புதுச்சேரி
கோப்பு படம்.
- திருபுவனை அருகே கலித்தீர்த்தாள்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கவியரசன்.
- இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பாரதிகண்ணன் என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.
புதுச்சேரி:
திருபுவனை அருகே கலித்தீர்த்தாள்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கவியரசன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பாரதிகண்ணன் என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.
கவியரசன் அங்குள்ள காலி மனையில் இயற்கை உபாதை கழிக்க சென்றார். அப்போது அங்கு வந்த பாரதிகண்ணன் திடீரென கவியரசனை கல்லால் தாக்கினார். மேலும் கொலை செய்துவிடுவதாக மிரட்டி விட்டு தப்பியோடி விட்டார்.
இதில் படுகாயமடைந்த கவியரசன் அங்குள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து கவியரசனின் சகோதரர் பூவரசன் கொடுத்த புகாரின் பேரில் திருபுவனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.