புதுச்சேரி

பதவி உயர்வு மூலம் உதவியாளர் பணியிடத்தை நிரப்ப வேண்டும்-நேரு எம்.எல்.ஏ. கோரிக்கை

Published On 2023-03-21 09:21 GMT   |   Update On 2023-03-21 09:21 GMT
  • பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தத்துறை மத்திய அரசின் ஆணைக்கு மாறாக 2012-ம் ஆண்டு உதவியாளர்களுக்கான நியமன விதியை வெளியிட்டது.
  • தேவையற்ற போட்டி தேர்வுக்கு தயார் செய்ய அலுவலர்கள் விடுப்பு எடுத்து படிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

புதுச்சேரி:

புதுவை சட்டசபையில் பூஜ்யநேரத்தில் சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு பேசியதாவது:-

பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தத்துறை மத்திய அரசின் ஆணைக்கு மாறாக 2012-ம் ஆண்டு உதவியாளர்களுக்கான நியமன விதியை வெளியிட்டது. நேரடி நியமனத்திற்கான விண்ணப்பங்கள் அகில இந்திய அளவில் கோரப்பட்டுள்ளது. இதனால் புதுவை வாழ் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பறிபோகும்.

உதவியாளர் பதவி என்பது நிர்வாகத்தில் மிகவும் முக்கியமான பதவியாகும். எனவே அனுபவமிக்க ஆட்களை கொண்டே நிரப்பப்பட வேண்டும். தேவையற்ற போட்டி தேர்வுக்கு தயார் செய்ய அலுவலர்கள் விடுப்பு எடுத்து படிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

எனவே 600 உதவியாளர் காலி பணியிடங்களை 7 ஆண்டுகளுக்கு மேலாக பணியில் உள்ள யூ.டி.சி.க்களை கொண்டு நிரப்பினால்தான் 800-க்கும் மேற்பட்ட எல்.டி.சி., யூ.டி.சி. பணியிடங்கள் காலியாகும்.

இதை படித்த பட்டதாரி இளைஞர்களை கொண்டு நேரடி நியமன தேர்வு நடத்தி நிரப்ப வாய்ப்புகள் உருவாகும். அரசும் சம்மந்தப்பட்ட துறையும் கவனத்தில் கொண்டு புதுவை மாநிலத்தில் உள்ள படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு நேரு பேசினார்.

இதே கருத்தை வலியுறுத்தி தி.மு.க. எம்.எல்.ஏ. அனிபால் கென்னடியும் பேசினார்.

Tags:    

Similar News