புதுச்சேரி

கோப்பு படம்.

கைது செய்யப்பட்ட வில்லியனூர் சார்பதிவாளர் சஸ்பெண்டு

Published On 2023-06-21 13:44 IST   |   Update On 2023-06-21 13:44:00 IST
  • போலீஸ் சூப்பிரண்டு மோகன்குமார் தலைமையில் புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
  • தற்போதைய வில்லியனூர் சார்பதிவாளருமான சிவசாமியை போலீசார் கைது செய்துள்ளனர்.

புதுச்சேரி:

புதுவை காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான புதுவை ரெயின்போ நகர் 7-வது குறுக்கு தெருவில் 64 ஆயிரத்து 35 சதுரடி பரப்பளவில் சுமார் ரூ.12 கோடியே 45 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பிலான விவசாய நிலம் உள்ளது.

போலி ஆவணங்கள் மூலம் கோவில் நிலத்தை அபகரித்து விட்டதாக சி.பி.சி.ஐ.டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் புதுவை சி.பி.சி.ஐ.டி போலீஸ் சூப்பிரண்டு மோகன்குமார் தலைமையில் புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையில் சென்னையை சேர்ந்த ரத்தினவேல், அவரது மனைவி மோகனசுந்தரி, மனோகரன் புதுவையை சேர்ந்த சின்னராசு (எ) பழனி மற்றம் சிலர் போலி ஆவணங்களை தயாரித்து கோவிலுக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து வீட்டு மனைகளாக மாற்றி விற்பனை செய்தது தெரிய வந்தது.

இதனையடுத்து இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட 12 பேரை போலீசார் இதுவரை கைது செய்தனர்.

இந்த நிலையில் போலி பத்திர பதிவு செய்த அப்போதைய உழவர்கரை சார்பதிவாளரும், தற்போதைய வில்லியனூர் சார்பதிவாளருமான சிவசாமியை போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சார்பதிவாளர் சிவசாமி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அரசு ஊழியர் நன்னடத்தை விதிப்படி சார்பதிவாளர் சிவசாமி சஸ்பெண்டு செய்யப்பட்டார். இதற்கான உத்தரவு வெளியாகிறது.

Tags:    

Similar News