புதுச்சேரி

உழைக்கும் மக்கள் கூட்டமைப்பினர் அமைச்சர் சந்திரரபிரியங்காவிடம் மனு அளித்தனர்.

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு அடுக்குமாடி வாடகை குடியிருப்பு

Published On 2023-06-07 11:32 IST   |   Update On 2023-06-07 11:32:00 IST
  • உழைக்கும் மக்கள் கூட்டமைப்பு சார்பில் ஒருங்கிணைப்பாளர் சுமதி தலைமையில் அமைச்சர் சந்திர பிரியங்கவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
  • இலவச மனைப்பட்டா வழங்கும் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

புதுச்சேரி:

உழைக்கும் மக்கள் கூட்டமைப்பு சார்பில் ஒருங்கிணைப்பாளர் சுமதி தலைமையில் நிர்வாகிகள் மங்கையர்கரசி, கயல்விழி, அம்சவள்ளி ஆகியோர் அமைச்சர் சந்திர பிரியங்கவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நகர் பகுதியில் வாழும் வீட்டு வேலை பணியா ளர்கள், கட்டடத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தொழிலாளர் துறை சார்பில் அடுக்கு மாடி குடியிருப்புகளை உருவாக்கி குறைந்த கட்டணத்தில் வாடகைக்கு விட வேண்டும்.

கிராமப்புற விவசாயத் தொழிலாளர்களுக்கு ஆதிதிராவிடர் மற்றும் நில அளவைத் துறைகள் மூலம் இலவச மனைப்பட்டா வழங்கும் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

தொழிலாளர் நல வாரியத்தில் ஆண்டு தோறும் செலுத்த வேண்டிய உறுப்பினர் கட்டணத்தை ஆதிதிராவிட தொழிலாளர்களுக்கு சிறப்புக்கூறு நிதியிலிருந்து செலுத்த வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News