கோப்பு படம்.
அனைத்து கல்லூரிகளிலும் பேராசிரியர்கள், மாணவர்கள் அடங்கிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு
- சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை
- மாணவர் நலச்சங்க நிர்வாகிகளுடன் போலீசார் ஆலோசனைக்கூட்டம் போலீஸ் தலைமையகத்தில் நடந்தது.
புதுச்சேரி:
புதுவையில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே கஞ்சா புகைக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இதையடுத்து மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல் கல்லூரி டீன், மக்கள் தொடர்பு அதிகாரிகள், மாணவர் நலச்சங்க நிர்வாகிகளுடன் போலீசார் ஆலோசனைக்கூட்டம் போலீஸ் தலைமையகத்தில் நடந்தது.
கூட்டத்துக்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாராசைதன்யா தலைமை வகித்து பேசியதாவது:-
கஞ்சா பழக்கத்தால் மாணவர்கள் வாழ்க்கையை சீரழித்து கொள்கின்றனர். ஒவ்வொரு கல்லூரியிலும் பேராசிரியர், மாணவர்கள் அடங்கிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு உருவாக்க வேண்டும். மாணவர்கள் மத்தியில் கஞ்சா பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மாணவர்களின் பழக்க வழக்கம், நடவடிக்கைகளில் மாற்றம் கண்டறிந்தால் உடனடியாக பெற்றோர்களை அழைத்து விசாரிக்க வேண்டும்.
சந்தே கப்படும் மாணவர்களை அடையாளம் கண்டு கவுன்சிலிங் அளிக்க வேண்டும். இவ்வாறு நாரசைதன்யா கூறினார்.
கூட்டத்தில் எஸ்பிக்கள் ரவிக்குமார், ஜிந்தாகோதண்டராமன், பக்தவச்சலம், சுவாதிசிங், வம்சீதரெட்டி மற்றம் 49 கல்லூரி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.