கோப்பு படம்.
அந்தோணியார் ஆலய ஆடம்பர தேர்பவனி
- வில்லியனுார் புனித லுார்து அன்னை பள்ளி முதல்வர் அல்வின் அன்பரசு தலைமையில் திருப்பலியும் நடக்கிறது.
- புதுவை, கடலுார் உயர்மறை மாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமையில் பெருவிழா திருப்பலி நடக்கிறது.
புதுச்சேரி:
புதுவை ஆட்டுப்பட்டியில் உள்ள புனித அந்தோணியார் ஆலய ஆண்டு விழா மூலக்குளம் பெத்தி செமினார் சி.பி.எஸ்.இ., பள்ளி முதல்வர் பாஸ்கல்ராஜ், பங்குதந்தை பெர்க்மான்ஸ் பீட்டர் தலை மையில் கொடி யேற்றத்துடன் தொடங்கியது.
இன்று காலை 7 மணிக்கு நைனார்மண்டபம், புனித அன்னை தெரசா பதின்ம மேல்நிலைப் பள்ளி முதல்வர் ஆரோக்கிய ஆனந்தராஜ் தலைமையில் திருப்பலியும், 5 மணிக்கு வில்லியனுார் புனித லுார்து அன்னை பள்ளி முதல்வர் அல்வின் அன்பரசு தலைமையில் திருப்பலியும் நடக்கிறது.
நாளை (திங்கட்கிழமை) மாலை 5.30 மணிக்கு தேர்பவனியும், வெள்ளக்குளம் பங்கு தந்தை ஜீவா எட்வர்டு எடி சன் தலைமையில் திருப்பலி நடக்கிறது. நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 6.30 மணிக்கு பெத்தி செமினேர் மேல்நிலைப் பள்ளி துணை முதல்வர் ஜான்பால் தலைமையில் திருப்பலியும், மாலை 5.30 மணிக்கு ஆடம்பர தேர்பவனி நடக்கிறது. தொடர்ந்து, 6.30 மணிக்கு புதுவை, கடலுார் உயர்மறை மாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமையில் பெருவிழா திருப்பலி நடக்கிறது.