புதுச்சேரி

புதுச்சேரி அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வீராம்பட்டினம் பகுதியில் துப்புரவு பணியில் ஈடுபட்டனர்.

அமலோற்பவம் பள்ளி மாணவர்களின் என்.எஸ்.எஸ். சிறப்பு முகாம் நிறைவு விழா

Published On 2023-10-14 11:49 IST   |   Update On 2023-10-14 11:49:00 IST
  • முகாமில் நாட்டு நலப்பணி திட்டத்தின் முக்கியத்துவம், வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
  • என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர்கள் டேவிட் செயின்ட் அந்தோணி, சசி கலா மற்றும் ஆசிரியர்கள் ராஜேஷ் கண்ணா, சுருதி ஆகியோர் செய்திருந்தனர்.

புதுச்சேரி:

புதுச் சேரி அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளி மாண வர்களுக்கு வீராம்பட்டி னம் குடியிருப்பு பகுதியில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் கடந்த 30-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை நடந்தது.

முகாமை நாட்டு நலப்பணித்திட்ட அதிகாரிகள் சதீஷ்குமார், மதிவாணன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.

முன்னதாக பள்ளி துணை முதல்வர் செல்வநாதன் வரவேற்றார். இம் முகாமில் நாட்டு நலப்பணி திட்டத்தின் முக்கியத்துவம், வாழ்க்கையில் ஏற்ப டுத்தும் தாக்கம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

பிறகு மாணவர்கள் அப்பகுதி மக்களிடம் அவர்களின் உடல், மனம், கல்வி சார்ந்த முன்னேற்றம் குறித்து விளக்கினர். மேலும், மக்களின் குடும்ப வருமானம், கல்வித்தகுதி கள் குறித்து கணக்கெடுப்பு, டெங்கு தடுப்பு பற்றிய விழிப்புணர்வு, மருத்துவ முகாம், துப்புரவு பணி, பனை மரக்கன்றுகள் நடு தல் உள்ளிட்ட சமூக பணி யில் ஈடுபட்டனர்.

முகாமின் நிறைவு விழாவில் முன்னாள் கவுன்சிலர் சக்திவேல், மருந்தியல் கல்லூரியின் முதல்வர் கோபால், அமலோற்பவம் குழுமத்தின் நிறுவனரும், தாளாளரும், முதுநிலை முதல்வருமான லூர்து சாமி, பள்ளியின் முதல் வர் ஆன்டோனியோஸ் பிரிட்டோ ஆகியோர் கலந்து கொண்டு மாண வர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர்கள் டேவிட் செயின்ட் அந்தோணி, சசி கலா மற்றும் ஆசிரியர்கள் ராஜேஷ் கண்ணா, சுருதி ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News