புதுச்சேரி

மதகடிப்பட்டில் வேளாண் நிலங்களை அமலோற்பவம் பள்ளி மாணவர்கள் பார்வையிட்ட காட்சி.

அமலோற்பவம் பள்ளி மாணவர்கள் வேளாண் நிலத்துக்கு களப்பயணம்

Published On 2023-09-10 13:40 IST   |   Update On 2023-09-10 13:40:00 IST
  • மதகடிப்பட்டுக்கு வேளாண் களப்பயணத்திற்கு அழைத்துச் செல்லப் பட்டனர். அங்கு மாணவர்கள் விவசாய நிலங்களை பார்வையிட்டனர்.
  • , கொய்யாவில் காற்று அடுக்குதல், மாம்பழத்தின் ஒட்டு கொய்யாவின் முதிர்வு அறிதல் பற்றியும் தெரிவித்தனர்.

புதுச்சேரி:

அமலோற்பவம் பள்ளியில் ஒவ்வொரு சனிக்கிழமையும் மாணவர்களுக்கு 'திறன்சார் கல்வி'யின்கீழ் விவசாய வகுப்புகளை நடத்தி வருகிறது .

அதன் ஒரு பகுதியாக நேரடியாக விவசாய நிலங்களுக்கே சென்று அனுபவக்கல்வி பெற முடிவு செய்யப்பட்டது. அதன்படி அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளியின் 9-ஆம் வகுப்பு மாணவர்கள்  மதகடிப்பட்டுக்கு வேளாண் களப்பயணத்திற்கு அழைத்துச் செல்லப் பட்டனர். அங்கு மாணவர்கள் விவசாய நிலங்களை பார்வை யிட்டனர்.

இப்பயணத்தின் போது வேளாண் ஆசிரியர்கள் பங்கேற்று நீர்வளம் உள்ள நிலம் மற்றும் நீர்வளம் இல்லா நிலங்களின் வேளாண்மை பற்றியும், பயிர்சுழற்சி முறை, நிலத்தை விவசாயத்திற்குப் பயன்படுத்துதல் மற்றும் வீட்டுத்தோட்டம் அமைத்தல் பற்றிய நுட்பங்களை எடுத்துரைத்தனர்.

மேலும், கொய்யாவில் காற்று அடுக்குதல், மாம்பழத்தின் ஒட்டு கொய்யாவின் முதிர்வு அறிதல் பற்றியும் தெரிவித்தனர்.

அப்போது மாணவர்கள் விவசாயி களுடன் உரையாடி அவர்களின் பலம் மற்றும் வலிகளையும் அறிந்ததுடன், பவர்டில்லர், பூச்சிக்கொல்லித் தெளிப்பு முறைகளையும் அறிந்து கொண்டனர். 

Tags:    

Similar News