அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி உதவி தொகை ரூ.5 ஆயிரம் வழங்க கோரி ஏ.ஐ.டி.யூ.சி. ஆர்ப்பாட்டம் நடந்த போது எடுத்த படம்.
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி உதவி தொகை ரூ.5 ஆயிரம் வழங்க கோரி ஏ.ஐ.டி.யூ.சி. ஆர்ப்பாட்டம்
- ஆம்பூர் சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
- ஏ.ஐ.டி.யூ.சி. மாநில தலைவர் தினேஷ் பொன்னையா போராட்டத்தை முடித்து வைத்தார்.
புதுச்சேரி:
ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் சட்டசபை அருகே ஆம்பூர் சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.ஐ.டி.யூ.சி. மாநில பொதுச் செயலாளர் சேதுசெல்வம் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் சலீம் போராட்டத்தை தொடங்கி வைத்தார். கவுரவ தலைவர் அபிஷேகம், பொருளாளர் அந்தோணி, துணைத்தலை வர்கள் சந்திரசேகரன், முருகன், சேகர், மன்னாதன், சிவகுருநாதன், மாநில செயலாளர்கள் தயாளன், துரைசெல்வம், முத்துராமன், மூர்த்தி, ஹேமலதா, செந்தில் முருகன், பாஸ்கர பாண்டி யன், மரி கிறிஸ்டோபர் உட்பட அமைப்பு சாரா தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டார்கள். ஏ.ஐ.டி.யூ.சி. மாநில தலைவர் தினேஷ் பொன்னையா போராட்டத்தை முடித்து வைத்தார்.
அமைப்புசாரா சங்கத்தில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு தீபாவளி பண்டிகை காலங்களில் வழங்கி வரும் உதவித் தொகையை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.
கட்டுமான வாரிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை ரூ.5 ஆயிரம் உயர்த்தி வழங்க வேண்டும். பாசிக், பாப்ஸ்கோ,
கே.வி.கே., பாண்டெக்ஸ், பாண்பேப் உள்ளிட்ட புதுவை அரசு சார்பு நிறுவ னங்களில் பணிபுரியக்கூடிய ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நிலுவை சம்பளத்திலிருந்து 5 மாத சம்பளம் போனஸ் வழங்க வேண்டும்.
அமைப்பு சாரா நலவாரி யத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர தேவையான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். விவசாய தொழிலாளர்கள் நல வாரியத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வந்து தீபாவளி உதவித்தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.