புதுச்சேரி

புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் முன்னிலையில் கையெழுத்திட்ட காட்சி.

null

இந்திய நெல் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து செயல்பட ஒப்பந்தம்

Published On 2023-06-13 14:15 IST   |   Update On 2023-06-14 08:39:00 IST
  • புதுவை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் இன்று ஐதராபாத்தில் உள்ள இந்திய நெல் ஆராய்ச்சி நிலையத்தை பார்வையிட்டார்.
  • பின்னர் நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குனர் சுந்தரத்தை சந்தித்தார்.

புதுச்சேரி:

புதுவை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் இன்று ஐதராபாத்தில் உள்ள இந்திய நெல் ஆராய்ச்சி நிலையத்தை பார்வையிட்டார்.

பின்னர் நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குனர் சுந்தரத்தை சந்தித்தார். அப்போது அவரிடம் புதுவையில் அதிக நெல் சார்ந்த ஆராய்ச்சிகளும் பயிற்சிகளும் நடத்துமாறு கேட்டுக்கொண்டார்.

காரைக்கால் பண்டித ஜவர்கலால் நேரு வேளாண் கல்லூரி முதல்வர் புஷ்பராஜ் மற்றும் இந்திய நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குநர் சுந்தரம் ஆகியோர் 2 நிறுவனமும் இணைந்து செயல்பட புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் முன்னிலை யில் கையெழுத்திட்டனர்.

பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தின் முதல்வர் சிவசுப்பிரமணியன் உடனிருந்தார்.

Tags:    

Similar News