கோப்பு படம்.
புதுவை அ.தி.மு.க.வினர் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி:
தமிழகம் முழுவதும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் நேற்றைய தினம் கொடநாடு வழக்கை துரிதப்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுவையில் சாரம் பாலத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் தலைமையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், அ.ம.மு.க. நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தின்போது அ.தி.மு.க. கொடிகளைகையில் ஏந்தியிருந்தனர். சுற்றுவட்டார பகுதி முழுவதும் இரட்டை இலை சின்னத்துடன் கூடிய அதிமுக கொடி ஏற்றப்பட்டி
ருந்தது. ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஓம்சக்திசேகர், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து பேசினார்.
இந்த நிலையில் புதுவை அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் நிர்வாகிகள் ரெட்டியார்பாளையத்தில் உள்ள தேர்தல் அலுவலுகத்தில் புகார் அளித்தனர்.
புகாரில், எடப்பாடி தலைமையிலான அதிமுகவே அங்கீகாரம் பெற்றது என சுப்ரீம்கோர்ட் தெரிவித்துள்ள நிலையில், அதிமுக கொடிகளை மற்றவர்கள் பயன்படு த்துவதை தடை செய்ய வேண்டும் என கோரியிருந்தனர்.
மேலும், புதுவை மாநில அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களை கண்டித்தும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்ததற்கு எதிராகவும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
புதுவை சாரத்தில் ஒ.பன்னீர்செல்வம் ஆதர வாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய அதே பாலத்தின் மீது நாளை (வியாழக்கிழமை) போராட்டம் நடத்த உள்ளனர்.
இதற்காக போலீசாரிடம் அனுமதி கோரி கடிதம் அளித்துள்ளனர்.