தி.மு.க. எம்.எல்.ஏ. கென்னடி புதுவை மின்துறை அதிகாரியை சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்த காட்சி.
தெருவிளக்குகளை கூடுதலாக அமைக்க வேண்டும்
- மின்துறை அதிகாரியிடம் கென்னடி எம்.எல்.ஏ. மனு
- கூடுதலாக ஐ-மாஸ் விளக்குகளை பொருத்த வேண்டும்.
புதுச்சேரி:
உப்பளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கென்னடி புதுவை மின்துறை அதிகாரியை சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட தமிழ்த்தாய் நகர் பகுதியில் உள்ள புறா குளம், லால் பகதூர் சாஸ்திரி வீதி, மகாத்மா காந்தி வீதி பகுதியில் உள்ள ஐ-மாஸ் விளக்கை சரி செய்ய வேண்டும். அங்கு கூடுதலாக ஐ-மாஸ் விளக்குகளை பொருத்த வேண்டும். மேலும் அங்கு உள்ள காந்தி வீதி, நேதாஜி நகர் 2 ரங்கநாதன் வீதி, அழகர்சாமி வீதி சந்திப்பில் எரியாத தெருவிளக்குகளை சரி செய்வதோடு அப்பகுதியில் புதிதாக கூடுதல் தெருவிளக்குகள் அமைத்துக் கொடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
மனுவை ஏற்று கொண்ட மின்துறை அதிகாரி இதனை உடனடியாக சரி செய்து தருவதாக உறுதியளித்தார். இந்த சந்திப்பின் போது அவைத் தலைவர் ஹரிகிருஷ்ணன், தொகுதி செயலாளர் சக்திவேல், மாநில பிரதிநிதி மணிகண்டன், மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி, கிளைச் செயலாளர்கள் காளப்பன், ராகேஷ் கவுதமன் ஆகியோர் உடன் இருந்தனர்.