புதுச்சேரி

அதிகாரிகளுடன் அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆலோசன நடத்திய காட்சி.

படகு,உபகரணங்கள் வாங்க புதுவை மீனவர்களுக்கு கூடுதல் நிதி

Published On 2023-07-09 13:40 IST   |   Update On 2023-07-09 13:40:00 IST
  • மகாபலிபுரம் மாநாட்டில் வலியுறுத்த அமைச்சர் முடிவு
  • கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மகாபலி புரத்தில் நடைபெறும் மீனவர்களுக்கான மாநாட்டில் அமைச்சர் லட்சுமி நாராயணன் வலியுறுத்த முடிவு செய்துள்ளார்.

புதுச்சேரி:

புதுவை மீன்வளத்துறை மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் உயர்மட்ட குழு கூட்டம் பொதுப்பணித் துறை அமைச்சர் அலுவலகத்தில் நடந்தது.

அமைச்சர் லட்சுமி நாராயணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் துறையின் செயலாளர் நெடுஞ்செழியன், இணை இயக்குனர் தெய்வசிகாமணி, மற்றும் அதிகாரிகள் மீரா சாகீப், கோவிந்தசாமி, நட ராஜன், ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

புதுவை அரசு சார்பில் மீனவர்களுக்கு செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் மற்றும் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மத்திய, மாநில அரசு மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டன.

தற்போது புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் எந்திரம் பொருத்திய மற்றும் எந்திரம் பொருத்தாத படகுகள் என 4 ஆயிரத்து 599 படகுகள் உள்ளன. இவற்றுடன் ஆழ் கடல் மீன்பிடித்தலை ஊக்குவிக்க தேவையான படகுகள், உபகரணங்கள் வாங்க மத்திய அரசிடம் நிதி பெறுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அனைத்து மீனவ கிராமங்களிலும் மத்திய, மாநில அரசு மூலம் மீனவர்க ளுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்களை விளக்கி மீன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என அதிகாரிகளை அமைச்சர் லட்சுமி நாராயணன் வலியுறுத்தினார்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மகாபலி புரத்தில்  நடைபெறும் மீனவர்களுக்கான மாநாட்டில் அமைச்சர் லட்சுமி நாராயணன் வலியுறுத்த முடிவு செய்துள்ளார்.

இந்த மாநாட்டில் மத்திய மீன்வளத்துறை மந்திரி புருசோத்தமன் ரூபாலா, மத்திய இணை மந்திரிகள் எல். முருகன், சஞ்சிவ் குமார் பல்யான் ஆகியோர் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News