புதுச்சேரி
கோப்பு படம்.
உற்பத்தி மானியம் வங்கி கணக்கில் சேர்ப்பு-அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தகவல்
- புதுவை வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
- வேளாண், விவசாயிகள் நலத்துறை கூடுதல் வேளாண் இயக்குனர் மூலம் தேசிய தோட்டக்கலை இயக்ககத்தின் கீழ் புதிய தோட்டம் நிறுவ, பராமரிக்க, மலர் சாகுபடி, கலப்பின காய்கறி, பழ பயிர்கள், வாசனை பயிர்கள் சாகுபடிக்கு உற்பத்திக்கு பிந்தைய மானியம் வழங்கப்படுகிறது.
புதுச்சேரி:
புதுவை வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வேளாண், விவசாயிகள் நலத்துறை கூடுதல் வேளாண் இயக்குனர் மூலம் தேசிய தோட்டக்கலை இயக்ககத்தின் கீழ் புதிய தோட்டம் நிறுவ, பராமரிக்க, மலர் சாகுபடி, கலப்பின காய்கறி, பழ பயிர்கள், வாசனை பயிர்கள் சாகுபடிக்கு உற்பத்திக்கு பிந்தைய மானியம் வழங்கப்படுகிறது.
இதன்படி 182.72 எக்டேர் பரப்பில் ஆடிபட்டம் 2022-ல் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்த 540 தோட்டக்கலை விவசாயிகளுக்கு ரூ.28 லட்சத்து 77 ஆயிரத்து 288 அவரவர் வங்கி கணக்கில் நேரடி பண பரிமாற்றமாக செலுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.