புதுச்சேரி

மயிலம் கல்வி குழுமத்தின் தலைவர் மற்றும் மேலான் இயக்குனர் தனசேகரன், துணைத்தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர். நாராயணசாமி கேசவன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டிய காட்சி.

தொழில்நுட்ப இணையதள பக்கம் உருவாக்கி சாதனை

Published On 2023-06-11 10:34 IST   |   Update On 2023-06-11 10:34:00 IST
  • மயிலம் என்ஜினீயரிங் கல்லூரியில் நடைபெற்றது.
  • மேம்பாட்டு துறையின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் விஜயராகவன் உட்பட பேராசிரியர்கள் கலந்துகொண்டு பாராட்டு தெரிவித்தனர்.

புதுச்சேரி:

மயிலம் என்ஜினீயரிங் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பத்துறையை சேர்ந்த இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களான ரகுநாத் மற்றும் பாலாஜி ஆகியோர் இணைந்து அனைத்து செயல்பாடுகளும் ஒரே இணைய பக்கத்தில் மேற்கொள்ளும் வகையில் ஆல் இன் ஒன் வெப் பேஜ் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.

தகவல் தொழில்நுட்பத்துறையின் உதவி பேராசிரியை ரம்யா வழிகாட்டுதலின்படி மாணவர்கள் கண்டுபிடித்த இந்த ஆல் இன் ஒன் வெப்பேஜ் குறித்த செயல்விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மயிலம் கல்வி குழுமத்தின் தலைவர் மற்றும் மேலான் இயக்குனர் தனசேகரன், துணைத்தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர். நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன். கல்லூரியின் இயக்குனர் செந்தில், முதல்வர் ராஜப்பன், தகவல் தொழில்நுட்பத்துறையின் துறைத்தலைவர் கலைவாணி கல்லூரியின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் விஜயராகவன் உட்பட பேராசிரியர்கள் கலந்துகொண்டு பாராட்டு தெரிவித்தனர்.

நம் அன்றாட கணினி சார்ந்த செயல்பாடுகளை ஒரே இணைய பக்கத்தில் மேற்கொள்ளும் வகையில் அனைத்து விதமான வசதிகளும் அமைந்துள்ளதால் பயனாளர்களுக்கு சிரமமின்றி எளிதில் நிறைவேற்றும் வகையிலும் இந்த ஆல் இன் ஒன் வெப்பேஜ் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News