புதுச்சேரி

கோப்பு படம்.

புதுவை பல்கலைக்கழகத்தில் 5 ஆண்டு படிப்புகளுக்கு குவிந்த விண்ணப்பங்கள்

Published On 2023-04-25 12:26 IST   |   Update On 2023-04-25 12:26:00 IST
  • புதுவை மத்திய பல்கலைகழகத்தில் இளநிலை, முதுநிலை, பி.எச்.டி. என 115 படிப்புகள் உள்ளன.
  • பிளஸ்-2 முடித்த மாணவர்களுக்கு 10 ஒருங்கிணைந்த 5 ஆண்டு படிப்புகள் உள்ளன.

புதுச்சேரி:

புதுவை மத்திய பல்கலைகழகத்தில் இளநிலை, முதுநிலை, பி.எச்.டி. என 115 படிப்புகள் உள்ளன. பிளஸ்-2 முடித்த மாணவர்களுக்கு 10 ஒருங்கிணைந்த 5 ஆண்டு படிப்புகள் உள்ளன. இந்த படிப்புகளுக்கு கியூட் தேர்வு எழுதினால் மட்டுமே சேர முடியும். இந்த படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டது. 10 படிப்புகளில் மொத்தம் உள்ள 287 இடங்களுக்கு 88 ஆயிரத்து 732 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

வேதியியல், இயற்பியல், கம்யூட்டர் சயின்ஸ் படிப்புகளுக்கு அதிகளவில் விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. இதனால் கடுமையான போட்டி உருவாகியுள்ளது. கியூட் தேர்வு மே 21 முதல் 31-ந்தேதி வரை நடக்கும் என அறிவிக்கப் பட்டுள்ளது. வருகிற 30-ந்தேதி தேர்வு மையங்கள் அறிவிக்கப்பட உள்ளது.

Tags:    

Similar News