புதுச்சேரி

மூடப்பட்ட பெட்ரோல் பங்குகளை திறக்கக்கோரி ஆம் ஆத்மி கட்சியினர் நூதன போராட்டம் நடத்திய காட்சி.

ஆம் ஆத்மி கட்சியினர் நூதன போராட்டம்

Published On 2023-06-13 14:05 IST   |   Update On 2023-06-13 14:05:00 IST
  • அரியாங்குப்பம் மற்றும் நோணாங்குப்பம் பகுதியில் ஏராளமான கிராமங்கள் உள்ளது.
  • இந்தப் பகுதியில் அமைந்துள்ள 2 தனியார் பெட்ரோல் பங்குகள் கடந்த பல மாதங்களாக திடீரென மூடப்பட்டது.

புதுச்சேரி:

அரியாங்குப்பம் மற்றும் நோணாங்குப்பம் பகுதியில் ஏராளமான கிராமங்கள் உள்ளது.

இந்தப் பகுதியில் அமைந்துள்ள 2 தனியார் பெட்ரோல் பங்குகள் கடந்த பல மாதங்களாக திடீரென மூடப்பட்டது. அதனால் மோட்டார் சைக்கிள், ஆட்டோ, கார் மற்றும் மினி லாரி வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மூடப்பட்ட பெட்ரோல் பங்குகளை திறக்கக்கோரி புதுவை மாநில ஆம் ஆத்மி கட்சி சார்பில் அரியாங்குப்பம் புறவழி சாலை சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணை ஒருங்கி ணைப்பாளர் இரிசப்பன் தலைமை தாங்கினார். புதுவை மாநில செயலாளர் ஆலடி கணேசன் ஆர்ப் பாட்டத்திற்கு முன்னிலை வகித்தார்.

மூடிய பெட்ரோல் பங்குகளை உடனடியாக திறக்க வேண்டும், இல்லையேல் அரசே அதை ஏற்று நடத்த வேண்டும் என மத்திய அரசையும் மாநில அரசையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

இதில் வாகனத்திற்கு பெட்ரோல் இல்லாமல் சாலையில் தவித்த மோட்டார் சைக்கிளை கீழே கிடத்தி பெட்ரோல் பாட்டில்களை மாலையாக அணிவித்தனர்.

இந்த போராட்டத்தில் மாநில துணைத்தலை வர்கள் மோகன், ஊசுடு சங்கர், மாநில இணை செயலாளர் பாலசங்கர், மாநில மகளிர் அணி தலைவி சரளா, மாநில இளைஞர் அணி செயலாளர் பிரபாகரன்,மாநில கொள்கை பரப்பு செயலாளர் லோகவசியன், வில்லியனூர் தொகுதி தலைவர் இளங்கோ, மாநில தொழிற்சங்க தலைவர் ஜோசப் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News