கோப்பு படம்.
ஆரோவில் பகுதியில் தொடர் திருட்டு
- மர்ம நபர்கள் யாரோ திட்டமிட்டு இந்த பேட்டரிகளை திருடி உள்ளனர்.
- ஆரோவில் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுச்சேரி:
திருச்சிற்றம்பலம் கூட்ரோடு அருகே ஜவகர் நகரை சேர்ந்தவர் சுந்தர பாண்டியன் (வயது 40). இவர் அப்பகுதியில் என்ஜினியரிங் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று இரவு வழக்கம் போல் பணியை முடித்து கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று உள்ளார். மறுநாள் காலையில் வந்து கடையை பார்த்த போது கடையின் ஷட்டரில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
அதிர்ச்சி அடைந்த சுந்தரபாண்டியன் கடையின் உள்ளே சென்று பார்த்த போது அவர் வைத்திருந்த ரூ 35 ஆயிரம் ரொக்க பணம் திருட்டு போயிருந்தது.
இதுகுறித்து சுந்தரபாண்டி யன் ஆரோவில் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ் பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்கு பதிவு செய்து திருட்டு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
பூத்துறை பகுதியில் சம்பவத்தன்று மின் துறை இளநிலை பொறியாளர் ரகுநாதன் மின்துறை ஊழியர்களுடன் மின் மாற்றி அமைக்கும் பணியை முடித்து விட்டு சென்று விட்டார். மறுநாள் காலையில் வந்து பார்க்கும் போது மின்மாற்றியில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உடைத்து அதிலிருந்த 120 கிலோ காப்பர் வயரை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ள னர். இதன் மதிப்பு பல லட்சமாகும்.
இதுகுறித்து இளநிலை பொறியாளர் ரங்கநாதன் ஆரோவில் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆரோவில் சர்வதேச நகரத்தில் பி.எஸ்.என்.எல் தொலைபேசி இணைப்பகம் அலுவலகம் உள்ளது.
சம்பவத்தன்று புகழேந்தி என்பவர் பணியில் இருந்தார். இரவு பணி முடித்து விட்டு மறுநாள் வந்து பார்க்கும்போது அங்கிருந்த ஜெனரேட்டரில் 4 பேட்டரிகள் திருட்டுப் போயிருந்தது தெரியவந்தது. மர்ம நபர்கள் யாரோ திட்டமிட்டு இந்த பேட்டரி களை திருடி உள்ளனர்.
இதுகுறித்து புகழேந்தி கொடுத்த புகாரின் பேரில் ஆரோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுவை கோரிமேடு அருகே தமிழக பகுதியான கலைவாணர் நகர் 3-வது குறுக்குத் தெருவில் வசிப்ப வர் சுந்தர்ராஜன். இவர் சம்பவதன்று இரவு வழக்கம்போல் வீட்டின் அருகே அவரது பைக்கை நிறுத்திவிட்டு தூங்க சென்றார். பின்னர் அதிகாலை வந்து பார்த்த போது அவரது பைக் திருட்டு போயிருந்தது. மர்ம நபர்கள் நோட்டமிட்டு பைக்கை திருடி சென்றுள்ளனர்.
இதுகுறித்து சுந்தரராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆரோவில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.
ஆரோவில் போலீஸ் நிலைய பகுதியில் கடந்த சில நாட்களாக இதுபோன்று இரவு நேரங்களில் நடக்கும் தொடர் திருட்டு சம்பவங்க ளால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.