புதுச்சேரி
கோப்பு படம்.
மின்துறை பெயரில் புதிதாக மோசடியில் ஈடுபடும் கும்பல்
- சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
- மோசடி தகவல்களை நம்ப வேண்டாம் என சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகேயன், கீர்த்தி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி:
புதுவையில் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருகிறது.
தற்போது மோசடி கும்பல் மின்துறையை பயன்படுத்த தொடங்கியுள்ளது.
புதுவையில் பலருக்கும் மின்துறை பெயரில் குறுஞ்செய்தி வருகிறது. அதில் உங்கள் இணைப்புக்கான கட்டணத்தை செலுத்தா ததால் இரவு 9.30 மணிக்குள் இணைப்பு துண்டிக்கப்படும். உடனடியாக மின்துறை அதிகாரியை தொடர்புகொள்ளவும் என தகவலுடன் ஒரு செல்போன் எண் இடம்பெறுகிறது.
இதை பார்த்த பயந்தவர்கள் மோசடிக்காரர்களை தொடர்புகொண்டு பணத்தை இழந்து ஏமாறுகின்றனர். எனவே இதுபோன்ற மோசடி தகவல்களை நம்ப வேண்டாம் என சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகேயன், கீர்த்தி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.