புதுச்சேரி

கோப்பு படம்.

பட்டதாரி வாலிபர் தற்கொலை

Published On 2023-04-19 12:56 IST   |   Update On 2023-04-19 12:56:00 IST
  • 4-வது மாடியில் இருந்து குதித்தார்.
  • உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புதுச்சேரி:

தமிழ்நாட்டை சேர்ந்த மயிலாடுதுறை அருகே உள்ள தர்மபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கலியபெருமாள். ஓய்வு பெற்ற வருவாய் அதிகாரி.

இவரது மகன் கார்த்திகேயன் (38).இவர் கோயம்புத்தூரில் உள்ள தனியார்என்ஜீனியரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்தபோது மன நோயால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சென்னையில் உள்ள பெரம்பூர் மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஒரு வருடமாக திருபுவனை அருகே உள்ள கலிதீர்த்தாள்குப்பத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று, வீட்டில் தங்கி ஓய்வு எடுத்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த 13-ந் தேதி வழக்கம் போல் சிகிச்சைக்காக பெற்றோருடன் வந்த கார்த்திகேயன் ஆஸ்பத்திரியில் மன வேதனையுடன் தனது அம்மாவுடன் உட்கார்ந்து இருந்தார்.

அப்போது திடீரென எழுந்து ஓடிய கார்த்திகேயன் ஆஸ்பத்திரியில் இருந்த 4 மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு அதேஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.இந்நிலையில் கார்த்திகேயன் சிகிச்சை பலனின்றி இறந்தார். தகவலறிந்த திருபுவனை போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News