ஆந்திரா பகுதியை சேர்ந்த சிவனடியார்கள் திரளாக கலந்து கொண்ட காட்சி.
- ராம் பரதேசி சாமிகள், தக்ஷிணாமூர்த்தி சாமிகள்,படேசாகிப் கண்டமங்கலம், குருசாமி அம்மையார் ஆகிய 21 சித்தர்களை தரிசித்தனர்.
- மார்க்கண்டேயர் திருமடம் ஊர்வலத்திற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது.
புதுச்சேரி:
புதுவை அய்யங்குட்டி பாளையத்தில் இயங்கி வரும் மார்கண்டேயர் திரு மடம் சார்பாக நேற்று புதுவை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சந்திரசேகர சாமி தலைமையில் 6-ஆம் ஆண்டாக புதுவை சித்தருடன் ஒரு நாள் என்ற ஊர்வலம் நடந்தது. இதில் புதுவை, சென்னை, திண்டிவனம், விழுப்புரம், சேலம், செஞ்சி, தஞ்சாவூர், கோயம்புத்தூர், ஆந்திரா, திண்டுக்கல், திருநெல்வேலி ,கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், மற்றும் ஆந்திரா பகுதியை சேர்ந்த சிவனடியார்கள் திரளாக கலந்து கொண்டு புதுவையில் ஜீவசமாதி அடைந்த தொல்லைக்காது சித்தர், நாகலிங்க சாமிகள், குரு அக்கா சாமிகள், வேதாந்த சுவாமிகள், மண் உருட்டி சாமிகள்,
குரு சித்தானந்தர் சாமிகள், பெரியவருக்கு பெரியவர், கணபதி சுவாமிகள், கம்பளி ஞான தேசிக சாமிகள், சிவ சடையப்பர், நாகராஜ் பாகவதர், கதிர்வேல் சாமிகள், சக்திவேல் பரமானந்தர்,மவுலா சாகிப் முல்லா வீதி, மகான்வண்ணார பரதேசி சுவாமிகள், தேங்காய் சுவாமிகள், ராம் பரதேசி சாமிகள், தக்ஷிணாமூர்த்தி சாமிகள்,படேசாகிப் கண்டமங்கலம், குருசாமி அம்மையார் ஆகிய 21 சித்தர்களை தரிசித்தனர்,
நிகழ்ச்சியில் 108 சிவனடியார்களுக்கு சிறந்த சைவ நெறியாளர்கள் விருது வழங்கப்பட்டது.
புதுவை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சந்திரசேகர சுவாமிகள், குரு மகா சன்னிதானம், வடபாதி ஆதீனம், கலியபெருமாள், கூட்டேரிப்பட்டு மனோகர், மெள சத்தியசுரூபன் சித்தர், இயற்கை ஆசிரமம் மங்களநாத குருக்கள், போர்.முனைவர் தி.மகா லட்சுமி நிறுவனர் திருமூலர் ஆகியோர் பங்கேற்றனர்.
மார்க்கண்டேயர் திருமடம் ஊர்வலத்திற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது.