புதுச்சேரி

புதுவை சன்டே மார்க்கெட்டில் பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்.

புதுவையில் குவிந்த மக்கள் கூட்டம்

Published On 2023-10-22 08:32 GMT   |   Update On 2023-10-22 08:32 GMT
  • போக்குவரத்து நெரிசல்
  • புதுவையில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகள், நட்சத்திர ஓட்டல்கள் அனைத்தும் நிரம்பி வழிகிறது.

புதுச்சேரி:

சுற்றுலா தலமான புதுவைக்கு வார இறுதிநாட்கள் மற்றும் தொடர் விடுமுறைநாட்களில் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். இந்தநிலையில் சனி, ஞாயிறு, திங்கட்கிழமை (ஆயுதபூஜை), செவ்வாய்க்கிழமை (விஜயதசமி) என தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.

இதனால் வெளிமாநிலங்களில் இருந்து புதுவைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்து வந்துள்ளனர். குறிப்பாக சென்னை- பெங்களூரில் ஏராளமான உள்ள சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.

இதனால் புதுவையில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகள், நட்சத்திர ஓட்டல்கள் அனைத்தும் நிரம்பி வழிகிறது. மேலும் ரெஸ்டோ பார், மதுபார்களில் மதுப்பிரியர்கள் கூட்டம் களைகட்டுகிறது.

இந்த நிலையில் நாளை ஆயுதபூஜையையொட்டி பூஜை பொருட்கள் வாங்க இன்று காலை முதல் புதுவை பெரிய மார்க்கெட் மற்றும் கடை வீதிகளுக்கு ஏராளமானோர் வந்திருந்தனர். புதுவை நகரின் அனைத்து வீதிகளிலும் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

அவர்கள் பூஜை பொருட்கள் வாங்குவதற்காக தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்த இடமில்லாமல் திண்டாடினர்.

மேலும் இன்று (ஞாயிற்றுகிழமை) சன்டே மார்க்கெட் என்பதால் பொருட்கள் வாங்க புதுவை யை சுற்றி உள்ள பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமானோர் குவிந்ததால் புதுவை நகரம் முழுவதுேம மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

குறிப்பாக ரங்க பிள்ளை வீதி, பாரதி வீதி, காந்தி வீதி, கொசக்கடை தெரு ஆகிய பகுதிகளில் கூட்ட நெரிசலால் போக்குவரத்து ஸ்தம்பித்து போனது.

போக்குவரத்து போலீசார் ஆங்காங்கு போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர்.

Tags:    

Similar News