புதுச்சேரி

கோப்பு படம்.

புதிதாக 82 பேருக்கு தொற்று பாதிப்பு

Published On 2023-04-09 08:08 GMT   |   Update On 2023-04-09 08:08 GMT
  • சுகாதாரத்துறையும் கொரோனா பரிசோதனைகளை அதிகரித்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
  • கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் இன்னும் வரவில்லை.

புதுச்சேரி:

புதுவையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரிதத்து வருகிறது.

இதனையடுத்து சுகாதாரத்துறையும் கொரோனா பரிசோதனைகளை அதிகரித்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடி க்கைகளை எடுத்துள்ளது. புதுவை மாநிலத்தில் 827 கொரோனா பரிசோ தனைகள் செய்யப்பட்டன.

இதில் புதுவையில் 55 பேர், காரைக்காலில் 23 பேர், ஏனாமில் 2 பேர், மாகியில் 2 பேர் என மொத்தம் 82 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதில் புதுவையில் 7 பேர், காரைக்காலில் 2 பேர் என மொத்தம் 9 பேர் மருத்துவமனையிலும், 262 பேர் வீட்டு தனிமையிலும் என மொத்தம் 271 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று 15 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். உயிரிழப்பு ஏதும் இல்லை. தற்போது ஜிப்மரில் ஒருவரும், கோரிமேடு மார்பக மருத்துவமனையில் 2 பேரும், கோவிட் கேர் சென்டர்களில் 6 பேரும் சிகிச்சையில் உள்ளனர்.

இத்தகவல்களை சுகாதா ரத்துறை தெரிவித்துள்ளது.புதுவையில் கடந்த சில தினங்களாக கொரோனா படிப்படியா அதிகரித்து வருகிறது. இது புதுவை மக்களிடம் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

இருந்தபோதிலும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் இன்னும் வரவில்லை. முகக் கவசம் அணிவது கட்டாயம் என்று அரசு அறிவித்துள்ள நிலையில் நேற்று பொது இடங்களில் திரிந்த பொதுமக்கள் பெரும்பாலானவர்கள் முகக் கவசம் அணியவில்லை.

ஒரு சதவீதத்துக்கும் முறை வானவர்கள் மட்டுமே முகக் கவசம் அணிந்திருந்தனர். அதே நேரத்தில் சுற்றுலா பயணிகளும் முகக் கவசம் அணியாமலேயே புதுவையை வலம் வந்தனர்.

Tags:    

Similar News