புதுச்சேரி

வீடு கட்ட தவணை தொகை பெற ஆணையை எதிர்கட்சி தலைவர் சிவா வழங்கினார்.

பயனாளிகளுக்கு ரூ.55 லட்சம் நிதி-எதிர்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. வழங்கினார்

Published On 2023-04-08 10:43 IST   |   Update On 2023-04-08 10:43:00 IST
  • 2 மற்றும் 3-ம் தவணை தொகைக்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நடந்தது.
  • பாலமுருகன், தயாளன், பாலு, முத்து, அசார், சுரேஷ், நடராசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி:

வில்லியனூர் தொகுதியில் பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்தில் குடிசைமாற்று வாரியம் மூலம் விண்ணப்பம் செய்துள்ள 45 பயனாளிகளுக்கு முதல், 2 மற்றும் 3-ம் தவணை தொகைக்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நடந்தது.

எதிர்க்கட்சித் தலைவர் சிவா எம்.எல்.ஏ. வீடுகட்டும் பயனாளிகளுக்கு ரூ.55 லட்சத்திற்கான தவணைத் தொகைக்கான ஆணையை வழங்கினார்.

நிகழ்ச்சியில் குடிசைமாற்று வாரிய இளநிலைப் பொறியாளர் அனில்குமார், ஆய்வாளர் இளங்கோவன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் ராமசாமி, செல்வநாதன், தொகுதி செயலாளர் மணிகண்டன், ரமணன், கிளைச் செயலாளர்கள் முருகன், பக்ருதீன், காளி, ஷேக் பாய், கலி முல்லா, பாலமுருகன், தயாளன், பாலு, முத்து, அசார், சுரேஷ், நடராசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News