புதுச்சேரி

மனதின் குரல் நிகழ்ச்சியின் 100-வது பாகம் உருளையன்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தொகுதி பொறுப்பாளர் வெங்கடேசன் எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் நடந்தது.

பல்வேறு கட்சியில் இருந்து 500 பேர் பா.ஜனதாவில் இணைந்தனர்

Published On 2023-05-01 14:30 IST   |   Update On 2023-05-01 14:30:00 IST
  • வெங்கடேசன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது.
  • நூற்றுக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டு பிரதமரின் உரையை கேட்டனர்.

புதுச்சேரி:

பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றும் மனதின் குரல் நிகழ்ச்சியின் 100-வது அத்தியாயம் மிக சிறப்பான முறையில் உருளை யன்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தொகுதி பொறுப்பாளர் வெங்கடேசன் எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் நடைபெற்றது.

இதில் நிர்வாகிகள் மற்றும் துப்புரவு பணியாளர்கள், பெண்கள், இளைஞர்கள் உட்பட நூற்றுக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டு பிரதமரின் உரையை கேட்டனர்.

பின்னர் புதிய பஸ் நிலையம் எதிரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி 500 பேர் வெங்கடேசன் எம்.எல்.ஏ தலைமையில் பா.ஜனதா கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு தொகுதி தலைவர் முன்னாள் கவுன்சிலர் பத்மாவதி என்கிற நாகம்மாள் முன்னிலை வகித்தார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் தொகுதி பொதுச் செயலாளர் மதன், துணைத் தலைவர் பாபு, பொருளாளர் பாலமுருகன், மாநில செயற்குழு உறுப்பினர் தனலட்சுமி, மாநில ஓ.பி.சி. அணி செயற்குழு உறுப்பினர் பிரியா, மாநில அறிவுசார் பிரிவு இணை அமைப்பாளர் சாய் சுதாகர், மாநில பிரசார பிரிவு இணை அமைப்பாளர் கிரிஜா, நகர மாவட்ட பட்டியல் அணி தலைவர் வெற்றிவேல், ஓ.பி.சி. அணி மாவட்ட பொதுச் செயலாளர் கீதா,

பா.ஜனதா கட்சியின் நிர்வாகிகள் வெங்கடாசலம், முருகன், பிரவீன், ஆகாஷ், பாலா, பாரதி, நாராயணன், பிரிட்டோ, அருள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News