புதுச்சேரி

அமைச்சர் சந்திரபிரியங்காவை எதிர்கட்சி தலைவர் சிவா சந்தித்து பேசிய காட்சி.

ஒரு மாதத்தில் 50 புதிய பஸ்கள்-அமைச்சர் சந்திரபிரியங்கா உறுதி

Published On 2023-05-14 13:15 IST   |   Update On 2023-05-14 13:15:00 IST
சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவித்தபடி புதிய பஸ்கள் வாங்குவதற்கு துரித நடவடி க்கை எடுக்க வேண்டும்.

புதுச்சேரி:

புதுவை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா பி.ஆர்.டி.சி .தொழிலாளர் முன்னேற்றச் சங்க செயலாளர் ராஜேந்திரன், தலைவர் திருக்குமரன், அய்யப்பன், ஐ.என்.டி.யு.சி குமரவேல், ஓட்டுநர், நடத்துநர் சங்கத் தலைவர் இளங்கோ மற்றும் ஊழியர்களுடன் அமைச்சர் சந்திரபிரியங்காவை சந்தித்து பேசினார்.

அப்போது, கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் பணிநீக்கம் செய்யப்பட்ட 12 ஊழியர்களுக்கு பணி வழங்க வேண்டும், 15 வருடம் ஓடிய பழைய பஸ்கள் 22 நிறுத்தப்பட்டதற்கு பதில் மாற்றுப் பஸ்களை வாங்கி இயக்க வேண்டும்,

கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவித்தபடி புதிய பஸ்கள் வாங்குவதற்கு துரித நடவடி க்கை எடுக்க வேண்டும்.

புதிய வழித்தடங்களில் அரசு பஸ்களை இயக்க வேண்டும், மாதம்தோறும் ஊதியம் வழங்க வேண்டும், நிலுவையில் உள்ள 2 மாத சம்பளத்தை வழங்க வேண்டும்.

பல வருடமாக வழங்கப்படாமல் உள்ள 46 சதவீதம் டி.ஏவை வழங்க வேண்டும், ஒப்பந்த ஊழிய ர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஊழியர்க ளுக்கு வழங்க வேண்டிய எம்.ஏ.சி.பி.ஐ காலதா மதமின்றி விசாரணை இருப்பின் விரைவாக நடவடிக்கை வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்த ப்பட்டன.

 கோரிக்கையை கேட்டறிந்த அமைச்சர் சந்திரபிரயங்க இன்னும் 15 நாட்களுக்குள் பேட்டரி பஸ்கள் வாங்கப்படும் என்றும் 50 புதிய பஸ்கள் ஒரு மாதத்தில் வாங்கி, புதிய வழித்தடத்தில் இயக்கப்படும் என்றும் ஊழியர்களின் சம்பளம் பிரதி மாதம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மற்ற கோரிக்கைகள் அரசின் கவனத்தில் உள்ளது எனவும் அவைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.

Tags:    

Similar News