ராமானுஜ நாவலர் சுவாமிகள் மன்றம் சார்பில் வைணவ மாநாடு நடந்த காட்சி.
- புதுச்சேரியில் ராமானுஜ நாவலர் சுவாமிகள் மன்றம் சார்பில், 45-ம் ஆண்டு வைணவ மாநாடு ஜெயராம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
- முதல் நிகழ்ச்சியாக விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் பல்வேறு குழுக்களால் நடைபெற்றது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் ராமானுஜ நாவலர் சுவாமிகள் மன்றம் சார்பில், 45-ம் ஆண்டு வைணவ மாநாடு ஜெயராம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முதல் நிகழ்ச்சியாக விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் பல்வேறு குழுக்களால் நடைபெற்றது.திருக்கோவிலுார் ஜீயர் ஸ்ரீ நிவாச ராமானு ஜாச்சாரியார் சுவாமிகள் மங்களா சாஸனத்துடன் மாநாடு தொடங்கியது.
ஸ்ரீமத் நம்மாழ்வார் வைணவ சபை செயலாளர் குமார் கருட கொடி யேற்றினார். மன்ற தலைவர் அரங்கசாமி தலைமையில் நடைபெற்ற விழாவில் பொருளாளர் திருவேங்கடம் ஆண்டறிக்கை வாசித்தார். நாவலரின் நற்பெருமைகள், சரணாகதி சாஸ்திரம், பண்பை வளர்க்கும் பகவத் சாஸ்திரம் என்ற தலைப்பில் சொற்பொழிவு நடை பெற்றது.
அதனைத் தொடர்ந்து குழந்தைகளின் கலை நிகழ்ச்சி, பேச்சு மற்றும் நாட்டிய போட்டி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக திருக்கோவிலூர் ஜீயர் ஸ்ரீநிவாச ராமானு ஜாச்சாரியார் சுவாமிகள் நாத யாமுன மத்யமாம் என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினார். மன்ற செயலாளர் கிருஷ்ணகுமார் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை கண்ணன் உட்பட ராமானுஜ நாவலர் சுவாமி மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.