கோப்பு படம்.
காவலாளியை கொலை செய்த 3 வாலிபர்கள் கைது
- அவரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி செல்வது பதிவாகியிருந்தது.
- 60 ரூபாய்க்காக முதியவரை 3 வாலிபர்கள் அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி:
புதுவை முத்தியால்பேட்டையை சேர்ந்தவர் முத்துகுமார்(60).
குடிபழக்கத்தால் குடும்பத்தில் இருந்து ஒதுக்கப்பட்ட இவர் கடந்த 4 ஆண்டு களாக வெள்ளாளர் வீதியில் ஒரு கடையில் காவலாளியாக வேலை செய்து வந்தார். வேலை முடித்து அதே வீதியில் நடைப்பாதையில் வசித்து வந்தார்.
முன்தினம் நள்ளிரவு 1.30 மணிக்கு அவர் அடித்து கொலை செய்யப்பட்டார்.
இது அங்குள்ள சி.சி.டி.வி.யில் பதிவாகியுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் காவலாளின் சட்டை பாக்கெட்டில் கைவிட்டு பணம் தேடியுள்ளனர். தூக்கத்திலிருந்து எழுந்த அவர் பணத்தை தர மறுத்துள்ளார்.
ஏற்கனவே போதையில் இருந்த வாலிபர்கள் சரமாரியாக அவரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி செல்வது பதிவாகியிருந்தது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பெரியகடை போலீசார் சி.சி.டி.வி. காட்சி மூலம் குருசுகுப்பத்தை சேர்ந்த மணிபாரதி, ஸ்டீபன், சசி ஆகியோரை கைது செய்தனர்.போதைக்காக பணம் திருடிய போது தடுத்த செக்யூரிட்டை அடித்து கொண்டதை ஒப்பு கொண்டனர்.
கொலை செய்யப்பட்டவரின் பாக்கெட்டில் ரூ. 60 மட்டுமே இருந்தது. 60 ரூபாய்க்காக முதியவரை 3 வாலிபர்கள் அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.