புதுச்சேரி
பொது இடத்தில் ரகளை செய்த 3 பேர் கைது
- போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரகளையில் ஈடுபட்ட 3 வாலிபரையும் மடக்கி பிடித்தனர்.
- 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:
நெட்டப்பாக்கம் அருகே கல்மண்டபத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே 3 வாலிபர்கள் மது குடித்து விட்டு அவ்வழியே செல்லும் பொதுமக்களிடம் தகராறு செய்து ரகளையில் ஈடுபடுவதாக நெட்டப்பாக்கம் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரகளையில் ஈடுபட்ட 3 வாலிபரையும் மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் வீராணம் பகுதியை சேர்ந்த சக்திவேல் (27), பண்டசோழநல்லூர் அறிவாளன் (23) மற்றும் கரையாம்புத்தூரை சேர்ந்த ராஜ்குமார் (31) என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.