புதுச்சேரி

பைக்கை திருடி செல்லும் காட்சி சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியிருப்பதை காணலாம்.

கடந்த 10 நாட்களில் விலை உயர்ந்த 25 பைக்குகள் திருட்டு- வெளி மாநில கும்பல் கைவரிசையா?

Published On 2023-07-24 04:24 GMT   |   Update On 2023-07-24 04:24 GMT
  • வழக்கு பதிவு செய்யப்படாமல் 15-க்கும் மேற்பட்ட திருட்டு புகார்கள் நிலுவையில் உள்ளது.
  • பைக் திருடிச்செல்லும் மர்ம நபர்களின் முழு உருவ படமும் சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் தெளிவாக தெரிகிறது.

புதுச்சேரி:

புதுவையில் கடந்த 10 நாட்களில் நகர பகுதியில் தொடர்ச்சியாக விலை உயர்ந்த பைக்குகள் திருடப்பட்டு வருகிறது. 'வீடு மற்றும் கடை வாசலில் நிறுத்தி வைக்கப்படும் பைக்குகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் திருடி வருகின்றனர்.

கடந்த 10 நாட்களில் அரியாங்குப்பம், பாகூர், பெரியக்கடை, காலாப்பட்டு, கிருமாம்பாக்கம், முத்தியால்பேட்டை, ரெட்டியார்பாளையம், சேதராப்பட்டு, திருபுவனையில் தலா ஒரு பைக், உருளையன்பேட்டை, தவளக்குப்பத்தில் தலா 2 பைக்குகள் திருடப்பட்டுள்ளதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதுதவிர வழக்கு பதிவு செய்யப்படாமல் 15-க்கும் மேற்பட்ட திருட்டு புகார்கள் நிலுவையில் உள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் புதுச்சேரி முழுவதும் 25-க்கும் மேற்பட்ட பைக்குகள் திருடப்பட்டுள்ளது.

ரெட்டியார்பாளையம் மற்றும் பெரியக்கடை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 பைக்குகளை 3 பேர் சேர்ந்து பூட்டை லாவகமாக உடைத்து திருடிச்செல்லும் சி.சி.டி.வி., காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் விசாரித்து வரு கின்றனர். பைக் திருடிச் செல்லும் மர்ம நபர்களின் முழு உருவ படமும் சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் தெளிவாக தெரிகிறது. பைக் திருட்டில் வெளிமாநில கும்பல் களம் இறங்கி உள்ளதா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News