புதுச்சேரி

கோப்பு படம்.

null

20 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் பாதிக்கப்படும் அபாயம்

Published On 2023-05-02 11:55 IST   |   Update On 2023-05-02 12:00:00 IST
  • புதுவை மாநிலத்தில் கோடைகால நவரை பருவ நெல் சாகுபடி பெருமளவு நடைபெற்று வருகிறது.
  • சுமார் 1300 ஹெக்டேர் பரப்பளவில் நெல் பயிற் நடவு செய்யப்பட்டுள்ளது.

பதுச்சேரி:

புதுவை மாநிலத்தில் கோடைகால நவரை பருவ நெல் சாகுபடி பெருமளவு நடைபெற்று வருகிறது. இதில் பாகூர் சேலிய மேடு, குருவிநத்தம், பரிக்கல் பட்டு, கிருமாம்பாக்கம்,உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1300 ஹெக்டேர் பரப்பளவில் நெல் பயிற் நடவு செய்யப்பட்டுள்ளது.

புதுவை மாநிலம் முழுக்க சுமார் 8 ஆயிரம் ஹெக்டேர் அதாவது 20 ஆயிரம் ஏக்கர் நெற்பயிருக்கு ஊட்டச்சத்தான ராசயன பொட்டாஷ் உரம் குறைந்த அளவு பயன்படுத்தி வருகின்றனர். அரசு ரசாயன உரத்திற்கு பதிலாக மாற்று ஏற்பாட்டில் ஆர்கானிக் உரங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

ஆனால் போதுமான உற்பத்தி கிடைக்காதால் ரசாயன உரத்தை நாட வேண்டி பல விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். நவரைப் பருவத்திற்கு ஏக்கருக்கு 10 கிலோ பொட்டாசியம் உரத்தை கலந்து நெல்களை எடுத்து முடிந்த பிறகு தெளித்து வருவார்கள்.

தற்போது விலை அதிகமாக இருந்து வருவதால் வாங்க முடியாமலும், உரக்கடைகளில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. புதுவையில் உள்ள உரக்கடை பல இடங்களில் பொட்டாசியம் உரம் இல்லாததால் விவசாயிகள் பலர் தமிழக பகுதியைச் சேர்ந்த விவசாயிகளிடம் கையேந்தும் சூழல் ஏற்பட்டுள்ளது.

பாசிக் அரசு நிறுவனமும் மூடப்பட்டுள்ளதால் பல விவசாயிகள் அருகிலுள்ள தமிழக பகுதியை சேர்ந்த விவசாயிகளிடம் கையேந்தி தனது நிலத்திற்கு பொட்டாசியம் உரத்தை தெளிக்கின்றதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

ஆனாலும் தமிழகப் பகுதியில் தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News