கோப்பு படம்.
குடிபோதையில் ரகளை செய்த 2 வாலிபர்கள் கைது
- விசாரணையில் அவர் வாரணப்பேட்டை எல்லையம்மன் கோவில் தோப்பு பகுதியை சேர்ந்த சஞ்சீவி (வயது19) என்பது தெரிய வந்தது.
- போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
புதுச்சேரி:
புதுவை வாணரப்பேட்டை ராஜராஜன் வீதியில் நேற்று மாலை ஒரு வாலிபர் குடிபோதையில் நின்று கொண்டு ரகளை செய்து கொண்டிருந்தார். அப்போது ரோந்து வந்த முதலியார்பேட்டை போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் வாரணப்பேட்டை எல்லையம்மன் கோவில் தோப்பு பகுதியை சேர்ந்த சஞ்சீவி (வயது19) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் மதகடிப்பட்டு 4 முனை சந்திப்பில் ஒரு வாலிபர் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பெண்களை பாட்டு பாடி கிண்டல் செய்து கொண்டிருந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் திருபுவனை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் திருபுவனை பெரியபேட் பகுதியை சேர்ந்த கவுதம்(33) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கைது செய்தனர்.