புதுச்சேரி

கோப்பு படம்.

அரசு செவிலிய அதிகாரிகள் 2 மணி நேர வெளிநடப்பு போராட்டம்

Published On 2023-08-07 10:41 IST   |   Update On 2023-08-07 10:41:00 IST
  • செயற்குழு கூட்டம் அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன அலுவலகத்தில் நடந்தது.
  • சுற்றறிக்கை வெளியிட்டதை கண்டித்து கடிதம் அளிப்பது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

புதுச்சேரி:

புதுவை அரசு செவிலிய அதிகாரிகள் சங்க செயற்குழு கூட்டம் அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன அலுவலகத்தில் நடந்தது.

சங்க தலைவர் சுனீலாகுமாரி தலைமை வகித்தார். செயலாளர் ஹரிதாஸ், அமைப்பு செயலாளர்கள் செல்வி, கிறிஸ்டினா சங்கீதா முன்னிலை வகித்தனர். சம்மேளன பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன், செயலாளர் ஜவகர், சுகாதார ஊழியர் சங்க சம்மேளன பொதுச் செயலாளர் முனுசாமி, துணை தலைவர் விநாயகம், அமைப்பு செயலாளர்கள் மணி வண்ணன், ஜெகநாதன் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் அரசு செவிலியர் அதிகாரிகள் சங்கத்தின் சார்பில் நடக்கும் போராட்டத்தின் தொடர்ச்சியாக வரும் 9-ந் தேதி மருத்துவமனையில் 2-மணி நேர வெளிநடப்பு போரட்டம் நடத்துவது, காரைக்காலில் மருந்தாளுநர் பயிற்சியை செவிலியர்களுக்கு அளிக்க சுற்றறிக்கை வெளியிட்டதை கண்டித்து கடிதம் அளிப்பது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பொருளாளர் பாக்கியவதி நன்றி கூறினார். 

Tags:    

Similar News