புதுச்சேரி

சாரதா கங்காதரன் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்க விழா நிகழ்ச்சி நடந்த போது எடுத்த படம்.

சாரதா கங்காதரன் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்க விழா

Published On 2023-08-21 12:47 IST   |   Update On 2023-08-21 12:47:00 IST
  • சாரதா கங்காதரன் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்க விழா நடந்தது.
  • கல்லூரி தலைவர் சுவாமிநாதன் தலைமை தாங்கி முதலாம் ஆண்டு மாணவர் களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

புதுச்சேரி:

சாரதா கங்காதரன் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்க விழா நடந்தது. கல்லூரி தலைவர் சுவாமிநாதன் தலைமை தாங்கி முதலாம் ஆண்டு மாணவர் களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

துணை தலைவர் பழனிராஜா மாணவ, மாணவிகள் இலக்குடன் பயின்று வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்று வாழ்த்தினர். கல்லூரி முதல்வர் உதயசூரியன் மாணவ, மாணவிகள் கல்வியோடு ஒழுக்கத் தையும் பயின்று வாழ்வில் மேம்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

தொடர்ந்து முதலாம் ஆண்டு மாணவ-மாண விகளுக்கு ஒரு வார கால இன்ட்ராக்ஷன் நிகழ்ச்சி நடந்தது. தமிழ் துறையை சேர்ந்த சீனு தண்டபாணி நம்மில் மாற்றமே ஏற்றம் என்ற தலைப் பிலும், மென்திறன் பயிற்சி யாளர் பிரிவில் பங்கேற்று ஆளுமை திறனை வளர்த்து கொள்வது குறித்து விளக்கி கூறினர்.

2-ம் நாள் நிகழ்வில், அஸ்கான் டெக்னாலஜி யின் நிறுவனர் கண்ணன் ராஜேந்திரன் மாணவர் கள் திறமைக்கான குறிக் கோளை நிர்ணயிப்பது பற்றியும், ஆங்கிலத்துறை பேராசிரியர் தாஸ் ஆங்கில மொழியின் முக்கியத்துவம் குறித்தும் பேசினர். 3-ம் நாள் நிகழ்வில் டாக்டர் அனுக் அரக்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கான வழி முறைகள் குறித்தும், டாக் டர் வரதராஜன் தியான பயிற்சி குறித்தும் பேசினர். 4-ம் நாள் நிகழ்வில் எல். எஸ்.இ. குளோபல் அகாடமி யின் நிறுவனர் வெங்கடேஷ் தகவல் தொடர்பு மற்றும் வாழ்க்கை திறன் குறித்து பேசினார்.

சாரதா கங்காதரன் கல்லூரி முன்னாள் மாண வரான யோகா மாஸ்டர் ஸ்வரூப் ரமணன் யோகாவின் முக்கியத்துவம் பற்றி விளக்கியத்துடன் அடிப்படை ஆசனங்களையும் செய்து காட்டி, பயிற்சியும் அளித்தார். தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

Tags:    

Similar News