புதுச்சேரி

வணிகவரித்துறை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற காட்சி.

வணிகவரித்துறை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்

Published On 2023-08-16 13:55 IST   |   Update On 2023-08-16 13:55:00 IST
  • புதுச்சேரி வணிகர் கூட்டமைப்பு சார்பாக தலைவர் பாபு தலைமையில் வணிகர்கள் வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
  • எனது விலைப்பட்டியல் எனது உரிமை என்ற திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

புதுச்சேரி:

நுகர்வோர் பயன்படும் வகையில் எனது விலைப்பட்டியல் எனது உரிமை என்ற திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரி வணிகவரித்துறையில் நடந்தது.

வணிகவரித்துறை ஆணையர் முகமது மன்சூர் தலைமையில் நடந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் கூடுதல் வணிகவரி துறை அதிகாரி ரவிச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் புதுச்சேரி வணிகர் கூட்டமைப்பு சார்பாக தலைவர் பாபு தலைமையில் வணிகர்கள் வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் மத்திய அரசு புதுச்சேரி , ஹரியானா, அசாம், குஜராத் ஆகிய மாநிலங்களில் எனது விலைப்பட்டியல் எனது உரிமை என்ற திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம் எந்த ஒரு ஜி.எ.ஸ்.டி பதிவு பெற்ற வணிக நிறுவனத்திடம் இருந்து ஒரு வாடிக்கையாளர் குறைந்தபட்சம் ரூ.200-க்கு மேல் கொள்முதல் செய்யும் பொருளுக்கான விலை பட்டியல் ரசீதைமத்திய அரசு (ஜி.எஸ்.டி.என்) பிரத்தியேக செயலி மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

அவ்வாறாக பதிவேற்றம் செய்யப்படும் விலைப்பட்டியல் ரசீது அடிப்படையில் பிரதி மாதம் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு ரூ.1 கோடிக்கு வரையான பரிசுத் தொகையை வழங்க திட்டமிட்டுள்ளது.

இந்த குலுக்கல் முறை முற்றிலும் கணினி மயமாக்கப்பட்டுள்ளது. என்பதனை வணிகவரித் துறை அதிகாரிகள் வணிகர்களிடத்தில் தெரியப்படுத்தினார்.

நுகர்வோர்கள் பயிரிடும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்த எனது விலைப்பட்டியல் எனது உரிமை திட்டத்திற்கு வணிகர்கள் மற்றும் வியாபாரிகள் வரவேற்பு அளித்தனர்.

Tags:    

Similar News