வழிபாடு
கடலூர் பாடலீஸ்வரர் கோவில் விழா தீப்பந்தம் ஏந்தி உலா வந்த பக்தர்கள்

கடலூர் பாடலீஸ்வரர் கோவில் விழா தீப்பந்தம் ஏந்தி உலா வந்த பக்தர்கள்

Published On 2022-05-30 07:24 GMT   |   Update On 2022-05-30 07:24 GMT
எல்லை கட்டும் விழாவையொட்டி தேரடி தெருவில் பிடாரி அம்மன் சிலை வைக்கப்பட்டு பல்வேறு பூஜைகள், சிறப்பு அலங்காரம், தீபாரதனை நடைபெற்றது.
கடலூர் திருப்பாதிரிபுலியூரில் பிரசித்திபெற்ற பாடலீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் வைகாசி திருவிழா நடந்து வருகிறது. கடந்த 2 ஆண்டு களாக கொரோனா தொற்று காரணமாக திருவிழா நடைபெறவில்லை.

இந்த ஆண்டுக்கான விழா வருகிற 5-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி பாடலீஸ்வரர் கோவிலில் உள்ள பிடாரி அம்மன் எல்லை கட்டும் விழா நடந்தது. முன்னதாக வண்ணாரப்பாளையத்தில் உள்ள மாரியம்மன் உற்சவம் நடைபெற்றது.

எல்லை கட்டும் விழாவையொட்டி தேரடி தெருவில் பிடாரி அம்மன் சிலை வைக்கப்பட்டு பல்வேறு பூஜைகள், சிறப்பு அலங்காரம், தீபாரதனை நடைபெற்றது. இரவு 12 மணி அளவில் தேரடி தெருவில் இருந்து அண்ணாபாலம் சிக்னல் வரையிலும், வண்டிபாளையம் சாலையில் இருந்து சுப்புராயலுசெட்டி தெரு, போடிசெட்டிதெரு பகுதியிலும் பக்தர்கள் தீ பந்தங்கள், அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களை ஏந்தி வந்தனர். அதன் பின்னர் எல்லை கட்டும் விழா நடந்தது.

இன்று (30-ந் தேதி) அமர்ந்தவாலி உற்சவமும், இரவு 10 மணி அளவில் பிடாரி அம்மன் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், 3-ந் தேதி பிடாரி அம்மன் வீதி உலாவும், 4-ந் தேதி விக்னேஷ்வர பூஜை நடக்கிறது. 5-ந் தேதி பாடலீஸ்வரர் கோவிலில் கொடியேற்றம் நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து இரவு பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடக்கிறது. இதையொட்டி ஒவ்வொரு நாளும் ஆன்மீக சொற்பொழிவு நடைபெறும். மேலும் 13-ந் தேதி தேர்திருவிழா நடைபெற உள்ளது.
Tags:    

Similar News