வழிபாடு
மாமல்லபுரம் தலசயனபெருமாள் கோவில்

மாமல்லபுரம் தலசயனபெருமாள் கோவிலில் மூடப்பட்ட வடக்கு, தெற்கு நுழைவு வழி விரைவில் திறக்க முடிவு

Published On 2022-04-21 12:47 IST   |   Update On 2022-04-21 12:47:00 IST
மாமல்லபுரத்தில் உள்ள தலசயன பெருமாள் கோவிலில் சுற்றுலா பயணிகள், பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டு உள்ளதாக இந்து அறநிலையத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
மாமல்லபுரத்தில் உள்ள தலசயன பெருமாள் கோயிலை பழமை மாறாமல் புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்துவதற்காக இந்து அறநிலையத்துறை சார்பில் ரூ.60லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த பணிகளை இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- கோவிலில் மூன்று மாதங்களுக்குள் பணிகளை முடிக்கும் படி அரசு கூறி உள்ளது. சுற்றுலா பயணிகள், பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.

கோவிலில் வடக்கு-தெற்கு நுழைவு வழிகள் மூடி இருப்பது விரைவாக திறக்கப்படும். கோவில் வளாகத்தில் வாகனங்கள் நிறுத்த கட்டணம் வசூலிப்பது தெரிய வந்துள்ளது. பக்தர்களுக்காக கட்டப்பட்ட கழிப்பிடம் திறக்க ஏற்பாடு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News